ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்.
பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகள் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறை, மின்சாதன மற்றும் இணைய வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்துதல் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1. கணினி பயிற்றுகர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 269 வாரிகதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…