Selvaperunthagai [file image]
விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, சித்தாமூர் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது, “ஏற்கனவே 40க்கு 40 என மாபெரும் வெற்றியை கொடுத்தீர்கள்.
திமுகவின் நல்லாட்சிக்கு நற்சான்று வழங்கினீர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்த சட்டம் இயற்றியவர் தமிழக முதல்வராவார். மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் நம் முதல்வர்.
கொரோனா காலகட்டத்தில் இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவ திட்டங்களை கொண்டு வந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தது போல இத்தேர்தலிலும் வாக்களிக்க வேண்டுகிறேன்” என்று கூறினார். இந்த பரப்புரையின் போது அமைச்சர்கள் கே என் நேரு, ராஜ கண்ணப்பன், எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், செல்வகணபதி , சுதா மாநிலத்துணைத்தலைவர்கள் குலாம் மொய்தீன், ரங்க பூபதி, மாவட்டத்தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…