ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம்! திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
களஆய்வின் ஒரு பகுதியாக விருதுநகர் சென்ற மு.க.ஸ்டாலின் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் இந்த அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சுமார் 2.06 லட்சம் சதுரடி பரப்பில் 6 தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டிட பணிகள் முடிந்து 2 வருடங்களுக்கு பிறகு இந்த அலுவகம் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக நேற்று விருதுநகருக்கு கள ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக புதிதாக கட்டப்பட்ட இந்த ஆட்சியார் அலுவலகத்தை திறந்து வைத்து, அலுவலகம் எப்படி இருக்கிறது என ஆய்வும் மேற்கொண்டார்.
அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து புதிதாய் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலத்தை பார்வையிட்டனர்.