தேர்தல் வாக்குறுதியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.அதன்படி,இந்த விவாத கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ஒரு அறிக்கையை தயார் செய்யும் போது, தாய் பூனை குட்டி பூனையை வாயில் கவ்வுவது போல் தாய் பாசத்தோடு இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது என விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவற்ற காலம் தாழ்த்துவதற்காகவே திமுக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டதா? என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:
“தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம்.விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் பல குறைகள் உள்ளன,அதை எல்லாம் சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர்,நகை,பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்படும்.
ஆனால்,அதிமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. ஏனெனில்,இலவச செல்போன்,ஆவின்பால் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.
மேலும்,மோனோ ரயில் கொண்டு வருவோம் என சொன்னீர்கள் ,அதை கொண்டு வந்தீர்களா?.அதற்கு பதிலாக திமுகவின் மெட்ரோ ரயில் திட்டத்தையே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தீர்கள்.இவ்வாறு,அதிமுக ஆட்சி நிறைவேற்றாமல் விட்ட வாக்குறுதிகள் பெரிய பட்டியலே உள்ளது”,என்று தெரிவித்தார்.மேலும்,”தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்து வருகிறோம்.சொல்லாததையும் செய்து வருகிறோம்”,என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…