#Breaking:நிவாரணப் பணி – திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு உணவு,மருந்துகளை அளிக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.
நேற்று இரவு முதல் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதேபோல,செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் இதே நிலை உருவாகியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு 200 மில்லி மீட்டருக்கும் அதிக மழை சென்னையில் பெய்துள்ளது.
இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில்,அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு உணவு,மருந்துகளை அளிக்க வேண்டும் எனவும்,பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025