காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரை அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,இன்று முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், “காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. (3-11-2021) உத்தரவிட்டுள்ளார்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அதற்கான அரசாணை இன்றைய தினம்
காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு. இடையறாது ஈடுபட்டு, சவாலான மாண்புமிகு தமிழ்நாடு காவல் பணியில் பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…