முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார் என ஈபிஎஸ் குற்றசாட்டு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈபிஎஸ், சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் ஆலோசனைப்படி சபாநாயகர் செயல்படுகிறார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தை 3 மாதம் சபாநாயகர் கிடப்பில் போட்டுவிட்டார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார்.ஸ்டாலின்- ஓ.பி.எஸ் நேற்று அரை மணி நேரம் சந்தித்து ஆலோசித்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதிமுகவை சிதைக்க வேண்டும், பிளக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணம் பலிக்காது என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…