#Breaking:மழை,வெள்ளம்:அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
சென்னை:மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரத்திற்கு முன்னர் தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்தில்,அமைச்சர்கள்,தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்க வைப்பது மற்றும் வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்தார்.
இந்நிலையில்,மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக,பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கவும் சிறப்பு அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஆணையிட்டுள்ளார்.