நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.. முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

mk stalin

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு, புதுமண தம்பதியினரை வாழ்த்தினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது திமுக ஆட்சி. 1967ல் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது.

1967க்கு முன் சுயமரியாதை திருமணங்களை நடத்த முடியாத சூழல் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது, சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி என்றார். திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், சிறந்த அணி இளைஞரணி. சேலத்தில் இளைஞரணி மாநாட்டுக்காக மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி கம்பீரமாக செயல்பட்டு வருகிறது.

8 கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை.. இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்றது கத்தார் அரசு!

சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி மக்களை குழப்பி வருகின்றனர். தேவையற்ற பிரச்சாரங்களை, பொய் செய்திகளை ஊடகம் மூலம் மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார். திமுக அரசு கோயில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் இந்த கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன்.

இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக மாடல் ஆட்சியில் தான் மீட்கப்பட்டு இருக்கிறது. நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார். உண்மையான பக்தியுடன் இருந்தால் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருகின்றனர் என குற்றச்சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்