முக்கிய அரசியல் புள்ளியின் மருமகன் மறைவு – முதல்வர் இரங்கல்!

தூத்துக்குடி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மருமகனும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான எஸ்.அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ கட்சியினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவில்பட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மறைந்த எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறுவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்று அறிந்து மிகவும் வருந்தியதாகவும், கொள்கைப்பற்றுமிக்க தோழரை இழந்து வாடும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,மருமகனை இழந்து தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.
“கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி”#DMK pic.twitter.com/JuotJOWHsU
— DMK (@arivalayam) April 5, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025