தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து,காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில்,திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை எனவும் மத,சாதி கலவரங்கள் இல்லை,துப்பாக்கிச்சூடுகளும் இல்லை எனவும் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பார்க்காமல்,சிபாரிசுகளுக்கு இடம் தராமல் காவல்துறையினர் சட்டத்தின் பக்கம் நின்று விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும் எனவும்,தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,இனி வரும் காலங்களில் கடவுச்சீட்டு விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவேண்டிய நிலை மாற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும்,விரைவில் தமிழகத்தில் 3000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்றும்,காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிச்சயம் கடைபிடிக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…