#Breaking:”பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Default Image

சென்னை:பல்கலைக்கழக துணை வேந்தர்களை இனி தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று கேள்வி – பதில் நேரம் நடைபெற்று வருகிறது.

அதன்படி,கேள்வி நேரத்தின்போது,பல்கலைக் கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேரவையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு,பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறுகையில்:”மகாராஷ்டிரா,மேற்கு வங்கத்தை தொடர்ந்து,பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது” என்று கூறினார்.

இந்நிலையில்,பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வரும் மார்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக,பல்கலைக் கழக துணை வேந்தர்களை நேரடியாட ஆளுநர் நியமனம் செய்து வரும் நிலையில்,பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதனால்,இந்த முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்