திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி,குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து,இந்த இரண்டு திட்டங்களையும்,தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும், முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திரனாளிகள் போன்றோர் அரசு நகரப்பேருந்திகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதன்படி,11,449 திருநங்கைகளில் 2956 திருநங்கைகள் மட்டுமே ரேசன் குடும்ப அட்டை வைத்துள்ளனர்.தற்போது அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…