திருநெல்வேலியின்,தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14 ஆம் தேதியன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கிய நிலையில்,இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.மேலும்,விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை,தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த முருகன்,செல்வன் ஆகிய இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சமும்,தொழிலாளார் நலவாரியம் சார்பில் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே,கல்குவாரி விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்ட முருகன்,விஜய்க்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…