சர்வதேச, தேசிய வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு விளையாட்டு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்.
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு 2018-19, 2019-20, 2020-21 -ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 1,130 வீரர்கள், வீராங்கனைகளுக்கு காசோலைகள் மற்றும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். 2018-19-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருத்தாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுத்தொகையும் வழங்கினார். சரத் கமல், சத்யன், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் பிரக்ஞானந்த உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச, தேசிய வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக இந்த நேரு விளையாட்டு அரங்கிற்கு நான் வந்துள்ளேன். இதில் இருந்தே விளையாட்டு துறை எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அமைச்சர் மெய்யநாதன் ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’ ஆகவே மாறிவிட்டார். சுறு சுறுப்பான அமைச்சர் கிடைத்ததற்கு பெருமை பட வேண்டும் என தெரிவித்த முதல்வர், விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…