கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு திருத்தி அமைக்க வேண்டும். மேலும், இலங்கை சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சி அமைந்து இந்த 4 ஆண்டுகளில் இந்த அரசு கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தது? தமிழக எம்பிக்கள் 39 பேர் நாடாளுமன்றத்தில் என்ன வலியுறுத்தியுள்ளனர்? அதனை முதலமைச்சர் விளக்க வேண்டும். 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக என்ன செய்தது? வாஜ்பாய் அரசில் கூட அங்கம் வகித்தீர்கள். அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
நான் பலமுறை பிரதமரை பார்த்தப்போது வலியுறுத்தியுள்ளேன், 54 முறை கடிதம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். நீங்களும் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செஞ்சீங்க? இப்போது கூட டெல்லி சென்று வந்தீங்க வலியுறுத்தப்பட்டதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
April 7, 2025