அண்ணா பிறந்த நாளில்,காவல்துறை மற்றும் சீருடைப்பணியாளர்கள் உள்ளிட்ட 134 பேருக்கு ‘அண்ணா பதக்கங்கள்’ வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்புடன் போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.குறிப்பாக,ஒவ்வொரு ஆண்டும் செப்.15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில்,அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ஆம் தேதி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில்,அண்ணா பிறந்த நாளில்,காவல்துறை மற்றும் சீருடைப்பணியாளர்கள் உள்ளிட்ட 134 பேருக்கு ‘அண்ணா பதக்கங்கள்’ வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதாவது,இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, தீயணைப்பு வீரர்கள் முதல் மாவட்ட அலுவலர் நிலையில் வகையிலான வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் , முதல்நிலை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் உதவிப் படை தளபதி முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர் காவல் படை அலுவலர்களுக்கும், விரல் ரேகை பிரிவில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோருக்கும் அவர்களின் மெச்சத் தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும்,கடந்த 14.11.2020 அன்று மதுரையில், நிகழ்ந்த தீ விபத்தில் இருந்து பல மனித உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்றிய நிலையில் கட்டிட இடிபாடுகளுக் கிடையே சிக்கி பலத்த காயங்களுடன் தங்கள் உயிரைத் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள் திரு.கு.சிவராஜன் மற்றும் திரு.பெ.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் உட்பட 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக “தமிழக முதல்வரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் மற்றும் தலா ரூ.5 இலட்சம் பண வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…