ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

mk stalin

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய அந்த கிராமத்தை சேர்த்த தம்பதியினருக்கு பாராட்டு தெரிவித்து ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் புளியரை கிராம பகுதியில் ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், நேற்று முந்தினம் நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை -கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Read More – பிரதமர் மோடி வருகை… மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை.!

அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா, வடக்குத்தியாள், செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

Read More – சிதம்பரம் எனது சொந்த தொகுதி… விட்டுக்கொடுக்க மாட்டேன்… திருமாவளவன் பேட்டி

இதன்பின் உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

Read More – அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள்!

எனவே, தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்