இன்று எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்.கழக பட்டமளிப்பு விழா:முதல்வர்,ஆளுநர் பங்கேற்பு!
சென்னை:இன்று டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. அதன்படி,இந்த விழாவில் 12,814 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.முதல்வராக பதவியேற்றபின் ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.