நம் நாட்டில் சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் போது, அம்மாநில குடிசை பகுதிகளை தார்பாய் கொண்டு மறைக்கும் வேலைகள் நடைபெற்றன. அப்படி திராவிட மாடல் அரசு எதனையும் மறைக்கும் அரசு இல்லை. – முதல்வர் ஸ்டாலின்.
சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில் மற்ற மாநில அரசு பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், நம் நாட்டில் சில மாநிலங்களில் வெளிநாட்டில் இருந்து தலைவர்கள் வரும் போது, அம்மாநில குடிசை பகுதிகளை தார்பாய் கொண்டு மறைக்கும் வேலைகள் நடைபெற்றன. அப்படி திராவிட மாடல் அரசு எதனையும் மறைக்கும் அரசு இல்லை. என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
கொளத்தூரில், ஜவகர் நகர் பகுதியில் 111.80 கோடி அரசு செலவில் 840 அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து இவ்வாறு பேசியுள்ளார்.
இதற்கு முன்னர் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் வருகையில், அங்குள்ள ஒரு குடிசை பகுதியை மறைக்க சுவர் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை மறைமுகமாக குறிப்பிட்டு தான் முதல்வர் பேசியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…