செந்தில் பாலாஜி உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும் – ஹெச்.ராஜா
காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் அவர்கள் தனது மெண்டல் பாலன்ஸை அவர் இழந்துள்ளார் என்பதை சமீப காலங்களில் அவர் பேசும் பேச்சுக்கள் மூலம் தெரிகிறது.
செந்தில் பாலாஜிக்கு இதய கோளாறு வரும் அளவிற்கு மத்திய அரசு நடந்து கொண்டதாக பேசியுள்ளார். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்களோட சீண்டலை எதிர்கொள்ளும் அளவில் திமுக இல்லை. திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் கிழடுகட்டைகள் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமலாக்கத்துறையால் சும்மா வழக்கு போடா முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் உள்ள அடைப்பை கண்டுபிடித்து, அவரின் உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும். ஆளுநரை பார்த்து உதயநிதி செருப்பால் அடிப்பார்கள் என பேசுகிறார். ஆளுநர் ஐபிஎஸ் படித்துவிட்டு உட்காந்திருக்கிறார். ஐபிஎஸ் பரீட்சையில் 5% மார்க் வாங்குவாரா உதயநிதி.
உதயநிதிக்கு சொல்கிறேன், அரசியலில் ஒழுங்கா நடக்க கற்றுக்கொள். எங்க பாணியிலே பதிலடி கொடுத்தால் உதயநிதி ஸ்டாலினால் தாங்க முடியாது. 2024 தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக, திமுக நீட் தேர்வை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இன்றைக்கு நீங்கள் ஊழலை பரவலாக்கியுள்ளீர்கள் என விமர்சித்துள்ளார்.