முதல்வர் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் – முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பாஜக எம்எல்ஏ..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது என நயினார் நாகேந்திரன் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லையில், ரூ.330 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் முத்தமிழ் அறிஞரின் புதல்வர்.. தமிழ்நாட்டு முதல்வர்.. தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. இந்த மாவட்டத்தின் மீது தங்கள் மிகுந்த கரிசனையோடு உள்ளீர்கள். இந்த மாவட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் நிறைய செய்திருக்கிறார்கள். மேலும் இங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கு ரூபாய் 15 கோடி ஒதுக்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை காணிக்கையாகக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு முதல்வரும் ஆட்சிக்கு வரும்போது சரித்திரத்தில் இடம் பிடிக்க ஏதாவது ஒன்றே செய்வதுண்டு. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.
அதற்காக மணிமுத்தாறு பாபநாசம் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மாநில அரசுகள் ஆராய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்றினால், மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இங்கு பல சிலைகளை திறந்து வைத்துள்ளார். அதுபோல நெல்லை மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலினும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.