கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Default Image

கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மறு ஆய்வு குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழு தாக்கல் செய்த  அறிக்கையில்,  தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து ஜூன் 10-ம் தேதி வரை உயிரிழந்தோரின் விடுபட்ட எண்ணிக்கை *444 என தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்தது.இந்த  மரணங்கள்  கொரோனா அறிக்கையில் நேற்று சேர்க்கப்பட்டதாக  சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால்  தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் விடுபட்ட எண்ணிக்கையும் சேர்த்து 3,144 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.அவரது வீடியோ பதிவில்,    தமிழ்நாட்டில் கொரோனாவே இல்லை என்று முதலில் மறைத்தது .கொரோனா மரணத்தை இந்த அரசாங்கம் மறைத்தது என்று நான் ஜூன் 15-ஆம் தேதி கூறினேன்.இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டது .இதற்கு உரிய விளக்கத்தை அரசாங்கம் கூற வேண்டும் என்று கூறினேன்.நான் அரசியல் செய்வதாக கூறி பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.தமிழ்நாட்டில் தான் கொரோனா மரணவிகிதங்கள் குறைவு என்று தனது ஆட்சியின் சாதனையாக முதலமைச்சர் கூறி வந்தார்.சாவை சாதனையாக சொன்ன முதல் ஆள் இவராத்தான் இருப்பார்.இவர் கூறியது பொய் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரியவந்தது. மரணத்திலும் பொய் கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால் பழனிசாமி ஆட்சியாகத்தான் இருக்கும். 3 நாளில் கொரோனா ஒழிந்துடும், 10 நாளில் கொரோனா ஒழிச்சிடுவேன்னு பொய் சவால்களா விடுத்து வந்த பழனிசாமி ஆட்சியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.

 அரசு இப்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை மறைக்கிறது. மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம்? மறைக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமானதும், வேறுவழியில்லாமல் வெளியில் சொல்லி விட்டார்கள்.கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்  என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்