தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்கள் நலன் கருதி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பில் வேம்பார் பனைபொருள்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும்.
கோவில்பட்டி பகுதியில் 10 கோடி மதிப்பில் கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 25 கோடி மதிப்பில் 50,000 சதுர அடியில் வர்த்தக வசதி மையம் கட்டப்படும் என அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திருநெல்வேலியில் அம்பாசமுத்திரத்திற்கு புதிய மருத்துவமனை கட்டிடம் , வள்ளியூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்படும், அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமணையுடன் இணைந்த கண்டியாபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடைய கூடிய நிலையில் உள்ளது. விரைவில் அதுவும் திறக்கப்படும். மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த மாஞ்சோலை சாலை ரூ.5 கோடி செலவில் புதிப்பிக்கப்படும், திருநெல்வேலி மாநகரருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசு ஆய்வில் உள்ளது.
இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனைத்து பணிகளும் தமிழக மாநில நிதியில் இருந்து வழங்கப்படுகிறது என கூறினார்.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…