ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் தயார் – தமிழக அரசு

rn ravi

கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.  முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம்.

பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியாக இருக்கும். முட்டுக்கட்டைக்கு ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என  தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஒத்தி வைத்திருந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

அப்போது தமிழக அரசு தரப்பில், நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தவுடன் அவசர அவசரமாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் இதை எப்படி ஏற்றுக் கொள்வது? என கேள்வி  எழுப்பியதோடு, மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்திக்க முதல்வர் தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி, ஆளுநர் தரப்பிலிருந்து ஏதாவது சில முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்; ஏன் எல்லா விவகாரத்திலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் நினைக்கிறார். முதல்வரும் ஆளுநரும் சந்தித்து பேசி இந்த பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3-வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல்  அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 27032025
o panneerselvam edappadi palanisamy
James Franklin srh 2025
CM MK Stalin
veera dheera sooran issue dhc
Edappadi K. Palaniswami o panneerselvam
shane watson