புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த் என்பவர் கலந்து கொண்ட நிலையில், அவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் சரகம், சீமானூர் கிராமத்தில் 23-4-2023 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த், த/பெ.ஆறுமுகம் (வயது 21) என்கின்ற மாடுபிடி வீரர். மாடு முட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…