புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி…!
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த் என்பவர் கலந்து கொண்ட நிலையில், அவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் சரகம், சீமானூர் கிராமத்தில் 23-4-2023 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த், த/பெ.ஆறுமுகம் (வயது 21) என்கின்ற மாடுபிடி வீரர். மாடு முட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/MQGmaxkDse
— TN DIPR (@TNDIPRNEWS) April 27, 2023