தருமபுரி : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். “மக்களுடன் முதல்வர்“ திட்டம் என்பது தமிழக முதல்வர் மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்க்கும் ஒரு திட்டமாகும். இதில், பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை முதல்வரிடம் நேரடியாக முன்வைக்கலாம்.
இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களின் குறைகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அந்தந்த அரசு அதிகாரிகள் நேரடியாக மக்களிடம் தகவல்களைப் பெறுவார்கள் மற்றும் விரைவாக தீர்வுகளை முன்மொழிவார்கள்.
இந்த திட்டத்தின் மூலம், அரசாங்கம் மக்களின் தேவைகளை விரைவாகக் கவனித்து, தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை (11.07.2024) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் தொடங்கி வைக்கிறார்.
முதற்கட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நகர் பகுதிகளில் 2058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இத்திட்டம் தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்தி விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு முறையை மேம்படுத்துவதோடு, மக்களின் நலனைப் பராமரிக்கவும், துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…