நெல்லை அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்த மத்திய அரசு – முதல்வர் பாராட்டு..!

Default Image

அகத்தியர் மலை தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்.தமைக்கு  பாராட்டு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  ட்வீட்.

இன்று உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில்,  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், நெல்லை அகத்தியர் மலையை யானையை காப்பகமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில், 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலை தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பாராட்டு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ ஐந்தாவது யானைகள் காப்பகத்தை அகத்திய மலையில் தமிழகம் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். வன சுற்றுச்சூழல் அமைப்புகளை சமநிலைப்படுத்துவதில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கம்பீரமான பாலூட்டிகள்  சொத்துக்கள். நாம் எந்த விலை தந்தாவது அதை பாதுகாக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்