மறைந்த தலைவா்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவா்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக மரியாதை செலுத்த முடியாமல் இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் ஜூலை 31-ம் தேதி என்பதால் அன்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியவில்லை, தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த அரசு அனுமதித்த நிலையில், இன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், இந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…