பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு ..!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனையில் முதல் முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். கொரோனா பரவல் அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் பிரதிநிதிகளுடன் மோடியை ஆலோசித்து வருகிறார்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.