உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு

Published by
Venu
இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18.12021 அன்று மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த திரு ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் திரு.அந்தோணிராஜ் என்பவரின் மகன்  திரு.மெசியா, திரு.வெள்ளைச்சாமி என்பவரின் மகள் திரு.நாகராஜ் ,திரு.செல்லம் என்பவரின் மகன் திரு.செந்தில்குமார் மற்றும் திரு.நிக்சன்டார்வின்  என்பவற்றின் மகன் திரு.சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இம்மீனவர்கள் 19.01.2021 அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும். அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று அறிந்தவுடன், எனது உத்தரவின்பேரில் இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. தற்போது இந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றுள்ளது.

 

இவ்விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு ,அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு /அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இச்சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு நாள் கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்டு நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

“தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்டு நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை "ஒரு நாடகம்" என்று…

1 hour ago

“இது எண்ணிக்கை பற்றியது அல்ல.. அதிகாரத்தை பற்றியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று…

2 hours ago

காஞ்சி பட்டு முதல் கடலை மிட்டாய் வரை… அரசியல் தலைவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!!

சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா,…

2 hours ago

“வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்…

3 hours ago

LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

4 hours ago

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…

5 hours ago