உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு

இவ்விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு ,அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு /அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இச்சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு நாள் கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் @CMOTamilNadu உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/p1btCvEpXx
— Venusubrmanian @ Dinesh (@Dineshvenu007) January 21, 2021