பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.
அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேலூரில், வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிகளில், ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாணியம்பாடி, மாலை 6 மணிக்கு ஆம்பூரில் பிரசாரம் செய்கிறார் . 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம், மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில் பிரசாரம் செய்கிறார்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு, மாலை 6 மணிக்கு வேலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…