மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு –  முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவு

Default Image

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது.

கட்டண விவரம் :

  • 0-2 கி.மீ வரை கட்டணம் ரூ.10
  • 2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20
  •  5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30
  • 12-21 கி.மீ வரை கட்டணம் ரூ.40
  • 21 கி.மீ முதல் 32 கி.மீ வரை கட்டணம் ரூ.50

“QR Code மற்றும்  மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20% தள்ளுபடி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 24 கி.மீக்கு மேல் பயணம் செய்தால் ரூ.70 கட்டணம் என்றிருந்த நிலையில் தற்போது கட்டணம் குறைப்புசென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணத்தை ரூ.70 லிருந்து, ரூ.50 ஆக குறைக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்