#Breaking: ஆளுனருடன் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து!
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கவிருந்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ரத்தானது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் காத்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசவிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவார் புயல் குறித்தும், 7 பேர் விடுதலை குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான இந்த சந்திப்பு, திடீரென ரத்தானது.