மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்தது.
இந்த அணை கட்டுவது தொடர்பாக கூறும் கர்நாடக பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறி வருகிறது.
இந்தத் திட்டம் மட்டும் நடைமுறைப்படுத்தபட்டால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டும் நீரின் அளவு அதிகளவு குறையும் வாய்ப்பு உள்ளது இந்த அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மேகதாது அணை தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை ரூ.5000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என கர்நாடக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.அதில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்விற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும்.மேகதாதுவில் அணை கட்டினால் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…