அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வருகின்ற 13-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.தற்போது மூன்றாவது கட்டமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நகர் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம்.சென்னையை தவிர்த்து மாநிலத்தில் பிற இடங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியில் உள்ள பகுதிகளில் 50 % ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களை ஆகஸ்ட் 1-ஆம் தேதி திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.