அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.எனவேமே 3-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் ஒரு சில மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பிரதமர் மோடி மே 3-ஆம் தேதிக்கு பிறகு நீட்டிப்பதா ? வேண்டாமா ? என்பதை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தான் பிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட நிலையில் ஊரடங்கு, கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.