ஹெச்.ராஜா அவதூறு பேச்சு…!சட்டப்படி முதலமைச்சர் பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார் …!அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி
ஹெச்.ராஜா குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.
இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஹெச்.ராஜா உள்ளிட்ட யாரும் சட்டத்தின்முன் சமம். சட்டப்படி முதலமைச்சர் பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.