இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் !!வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்!!முதலமைச்சர் பழனிசாமி
இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வழக்கப்பட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், குடிநீர் பிரச்சினையை கண்டறிந்து, அதனை தீர்க்க 3 ஒன்றியங்களுக்கு ஒரு துணை ஆட்சியர்கள் நியமனம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.
இந்த மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதேபோல் இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும்.60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.