மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் வைத்து முதல்வர் பழனிச்சாமி சந்திக்க உள்ளார் .
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வரும் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மேலும், அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று இரவு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.அதில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் , தேர்தல் பணிகள் குறித்தும் பேச உள்ளதாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அமித்ஷா தங்கியுள்ள சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று இரவு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.அந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை,வேல் யாத்திரையால் ஏற்பட்ட மோதல் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் அடுத்த நாள் காலை 10 மணிக்கு அமித்ஷா டெல்லிக்கு புறப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…