ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நாளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் கைரேகை கருவி வைக்கப்பட்டுள்ளது.தற்போது வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இனி கைரேகை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும்.ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.
இனி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில்ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…