நாளை முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு
நாளை முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.இந்நிலையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
முன்னதாக மதுரை, திண்டுக்கல், நெல்லை,சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.