மளமளவென்று ஊழல் செய்யும் முதல்வர் பழனிசாமி – தமிழகம் மீட்போம் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய முக ஸ்டாலின்.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்காக அனைத்து கட்சிகளும் ஆயுத்தமாகி வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ராமநாதபுரத்துக்கு வரும் ஆண்டுகளில் கொண்டு வரப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இப்போதே ஆராயத் தொடங்கி விட்டது திமுக.
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனவர் அல்ல. மறுபடியும் தனக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பதும் அவருக்கு தெரியும். அதனால் தான் இருக்கும் சில மாதங்களிலும் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓடும் மனநிலையில் மளமளவென்று ஊழல் செய்து குவித்து கொண்டிருக்கிறார். 4 ஆண்டுகள் சிறை, ரூ.100 கோடி அபராதம் என்பதே ஜெயலலிதாவின் ஆட்சி.
தன்னை மகா யோக்கியன், விவசாயி என்று காட்டிக் கொள்ளும் எடப்பாடி, கொள்ளையடிப்பது எப்படி என புத்தகம் எழுதுவதற்கு தகுதியான ஆள். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை அடமானம் வைத்தார். ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சியை குத்தகைக்கு விட்டார். அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுக்கு குத்தகைக்கு விட்ட பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும், ஜெயலலிதா நினைவிடத்துக்கும் போய் உங்களால் எப்படி மலர் வளையம் வைக்க முடிகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியிடம் நான் ஓரு கோரிக்கை வைக்கிறேன், போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பழனிசாமியை அனுப்புங்கள், அந்தளவுக்கு வேளாண் சட்டங்களை கரைத்து குடித்தவர் பழனிசாமி. தமிழகத்தில் அடுத்து அமையப்போவது தி.மு.க.வின் ஆட்சி தான் என்று முக ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்ட உரை! https://t.co/Qg8JPxH2Sf
— M.K.Stalin (@mkstalin) December 12, 2020