ஆம்புலன்ஸ்-க்குள் ஏறி செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி.!

Default Image

கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூடுதலாக 118 அவசர ஊர்தி வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. ஏற்கனவே, கொரோனா காலத்தில் செயல்பட 1005 ஆம்புலன்ஸுகள் தங்குதடையின்றி கட்டணமில்லாமல் இயங்கி வந்த நிலையில், தற்போது கூடுதலாக நவீன வசதியுடன் கூடிய 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்த பின்னர், ஆம்புலன்ஸ்-க்குள் ஏறி செயல்பாட்டை ஆய்வு செய்தார்.

இவருடன் சேர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆய்வு மேற்கொண்டார். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு நோய்த்தொற்று கண்டறிந்து, கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து விமான நிலையங்களிலும் 108 அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. இந்த வாகனங்களில் செயற்கை சுவாச கருவி, பல்ஸ் மீட்டர் மற்றும் வெண்டிலேட்டர் போன்ற உயர் சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை கையாள அவசரகால மேலாண்மை தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உயிர்காக்கும் உன்னதமான இச்சேவையை விரிவுபடுத்தவும், மக்களுக்கு விரைவாக உதவி கிடைத்திடும் விதமாகவும் முதல்வர் 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 புதிய அவசரகால ஊர்திகளை 108 ஆம்புலன்ஸ் சேவையில் இணைத்து வைக்கிறார்கள். முதல்கட்டமாக இன்று 118 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸிகளை முதல்வர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்