6 கோடியே 20 லட்சம் பேருக்கும் தெரியும் , முதலமைச்சர் பழனிசாமி மக்களால் தேர்தெடுக்கப்படவில்லை -கருணாஸ் பேட்டி
முதலமைச்சர் பழனிசாமி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என்று கருணாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,நான் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.நான் எம்எல்ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க முடியும். முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று கூறினார். முதலமைச்சர் இவ்வாறு கூறிய நிலையில் இதற்கு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில்,பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.அதிமுகவினரால் முதல்வராக்கப்பட்டவர். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று பழனிசாமி கூறி வரும் நிலையில்,அதனை அவர்தான் விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ,முதலமைச்சர் பழனிசாமி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என்று கூறியுள்ளார்.இது எல்லாருக்கும் தெரிந்தது தான்.தமிழகத்தின் ஓட்டுமொத்த வாக்காளர்களான 6 கோடியே 20 லட்சம் பேருக்கும் இது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.