#Breaking: எடப்பாடி தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார் முதல்வர் பழனிசாமி!

முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் சிரமமின்று வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலை ஏற்பட்டது.
காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அந்தவகையில் முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025