இன்று முதலமைச்சர் பழனிசாமி  நெல்லை பயணம்

Default Image

இன்று முதலமைச்சர் பழனிசாமி  நெல்லை பயணம் மேற்கொள்கிறார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் . திண்டுக்கல்லை தொடர்ந்து  மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று நெல்லை  மாவட்டத்திற்கு செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.அங்கு கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டு உள்ளது  என்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்