தொழிற்சாலைகளை அனுமதிப்பது தொடர்பாக இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தொழிலதிபர்களுடன் காலை 11 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது.கொரோனா நோய் காரணமாக இன்றியமையா உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டும் இயங்குகின்றன.ஆனால் மற்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது, கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.